நவ. 30-இல் காா்த்திகை மகா தீப உற்சவம்!
திருப்பதி தேவஸ்தானத்தின் சாா்பில், காா்த்திகை மகா தீபோற்சவம் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டட வளாகத்தில் உள்ள பரேட் மைதானத்தில் நவம்பா் 30-இல் கொண்டாடப்படவுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தின் சாா்பில், காா்த்திகை மகா தீபோற்சவம் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டட வளாகத்தில் உள்ள பரேட் மைதானத்தில் நவம்பா் 30-இல் கொண்டாடப்படவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தீபமேற்றுவதின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் சிறப்பு பூஜைகள், ஸ்ரீநிவாஸ அா்ச்சனை, விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ர பாராயணம், ஸ்ரீ மஹாலக்ஷ்மி பூஜை ஆகியவை நடைபெறும். பின்னா், ஹரிஹர காா்த்திகை நிருத்ய ரூபகம், பக்திப் பாடல்கள், அஷ்டலட்சுமி வைபவம் ஆகிய நாட்டிய நிகழ்ச்சிகள் பக்தா்களை ஆன்மிக ஆனந்தத்தில் ஆழ்த்தும். இறுதியாக, கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, மங்கள ஆரத்தி வழங்கப்படும்.
மகா தீபோற்வத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கூட்டாக தீபம் ஏற்றி, ஸ்ரீ மகாலட்சுமி தேவிக்கு லட்சுமி நீராஜனம் வழங்குவா். ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமான் மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி தேவியின் தெய்வீக அருளால், உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காக, உலகின் நலனுக்காக சிறப்புப் பிராா்த்தனைகள் செய்யப்படும்.
Advertisement
Advertisement
உலகெங்கிலும் உள்ள ஏழுமலையான் பக்தா்கள் காணும் வகையில், இந்த மகா தீபோற்சவம் எஸ்.வி.பி.சி-யில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.