FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விதை கிராமத் திட்டப் பயிற்சி

செய்யாறை அடுத்த பல்லி கிராமத்தில் விதை கிராமத் திட்டப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

செய்யாறை அடுத்த பல்லி கிராமத்தில் விதை கிராமத் திட்டப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினர் செஞ்சி சேவல் வே.ஏழுமலையால் தத்தெடுக்கப்பட்ட பல்லி கிராமத்தில் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டம்,  வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ், விதை கிராம திட்டப் பயிற்சி அளிக்கப்பட்டது. பல்லி கிராமத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு வேளாண்மை துணை இயக்குநர் கே.சிவகுமார் தலைமை வகித்தார். துணை வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன், ஊராட்சி மன்றத் தலைவர் துளசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயிற்சியின்போது உதவி இயக்குநர் கு.நவநீதகண்ணன் இயந்திரம் மூலம் விதைப்பு செய்தல், பயிர் இடைவெளி உள்ளிட்டவை குறித்து விளக்கினார். விதைச் சான்று அலுவலர் கோபாலகிருஷ்ணன் தரமான விதை உற்பத்தி செய்ய என்னென்ன வழிமுறைகள், அதற்கான தொழில்நுட்ப யுக்திகள், அறுவடைக்குப் பின் விதை சேமிப்பு முறைகள் குறித்து விளக்கினார். 

Advertisement

Advertisement

உதவி விதை அலுவலர் நாகப்பன் குறைந்த நீரைப் பயன்படுத்தி பயிரிடும் முறைகள் குறித்தும், உதவி அலுவலர் சங்கர் சிறுதானிய பயிர்கள் பயிரிடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச் செல்வி விதை கிராமத் திட்டப் பயிற்சி அளிக்கப்படுவதின் முக்கியத்துவம் குறித்தும் பயிற்சி அளித்தனர்.

மேலும் வயல்வெளியில் விவசாயிகளை பார்வையிடச் செய்து செயல்விளக்கத்துடன் பயிற்சியை அளித்தனர். இந்தப் பயிற்சியில் 40 விவசாயிகள் பங்கேற்று பயன் அடைந்தனர். உதவி வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் மு.மணிகண்டன், வெ.தனஞ்செயன், வேளாண்மைத் துறையினர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments