FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கூடுதல் விலைக்கு மது விற்பனை: ராணுவ வீரர், விற்பனையாளர் மோதல்

தண்டராம்பட்டில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றதை தட்டிக்கேட்ட ராணுவ வீரருக்கும், மதுபானக் கடை விற்பனையாளருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 9:45 am IST
பகிர்:

தண்டராம்பட்டில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றதை தட்டிக்கேட்ட ராணுவ வீரருக்கும், மதுபானக் கடை விற்பனையாளருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தண்டராம்பட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தவசீலன் (38). ராணுவத்தில் பணிபுரியும் இவர், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு தண்டராம்பட்டு - வணக்கம்பாடி சாலையில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையில் தவசீலன் மது வாங்கச் சென்றார்.
மதுபானக் கடை விற்பனையாளர் ஏழுமலையிடம் சென்று 5 பீர் வகை மதுப் புட்டிகளை வாங்கினாராம். அப்போது, கடை ஊழியர் ரூ.120 விலை கொண்ட ஒரு மதுப் புட்டிக்கு ரூ.130 தர வேண்டும் என்று கேட்டாராம். இதை தவசீலன் தட்டிக் கேட்டாராம்.
இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து விற்பனையாளர் ஏழுமலை, தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments