FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

மாணவர் நலனில் பெற்றோரின் பங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்யாறை அடுத்த பூதேரி புல்லவாக்கம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் நலனில் பெற்றோரின் பங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 9:45 am IST
பகிர்:

செய்யாறை அடுத்த பூதேரி புல்லவாக்கம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் நலனில் பெற்றோரின் பங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செய்யாறு நகர லயன்ஸ் சங்கம், கிராம வளரச்சிக் குழு இளைஞர்கள் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கத் தலைவர் தெய்வ.பொற்பாதம் தலைமை வகித்தார். பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வேணு வரவேற்றார்.
நிகழ்ச்சியின்போது, சிறப்பாளராக பங்கேற்ற பயிற்சியாளரும், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவருமான எம்.சண்முகம், மாணவர்களின் பெற்றோர்களுக்கு புகைப்படங்கள், விடியோக்களை காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது, தனியார் பள்ளியின் மோகம், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு, பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளை பேணிக் காப்பதில் ஏற்பட்டுள்ள தொய்வு, தொலைகாட்சியில் நாடகம் பார்ப்பதில் அதிகரித்துள்ள நாட்டம், பள்ளியில் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொள்ளாமை, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை கவனிக்க முடியாமல் தவறான வழியில் செல்ல தூண்டுதல் போன்ற குறைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
லயன்ஸ் சங்கச் செயலர் சுந்தரமூர்த்தி, ஆசிரியர் கழகத் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பள்ளி வளர்ச்சி குறித்தும், அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்தும் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments