சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
திருவண்ணாமலை-மணலூர்பேட்டை சாலை, கீழ்அணைக்கரை கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் சிலர் வீடு, கடைகளை கட்டி ஆக்கிரமித்து இருந்தனர்.
இதை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து, புதன்கிழமை காவல்துறை, வருவாய்த்துறை உதவியுடன் நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.