FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

கீழ்பென்னாத்தூர்  ஊராட்சி  ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, மெட்ரிக் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

கீழ்பென்னாத்தூர்  ஊராட்சி  ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, மெட்ரிக் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் வட்டார வள மையத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்டாரக் கல்வி அலுவலர் மோகன் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் ஸ்ரீராமுலு முன்னிலை வகித்தார். கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் டி.கே.லட்சுமி நரசிம்மன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஊராட்சி ஒன்றியம் மூலம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் துப்புரவுத் திட்டம், எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம், பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பொது சுகாதாரத்துடன் கூடிய டெங்கு ஒழிப்புத் திட்டம், பிளாஸ்டிக் தவிர்ப்பு மற்றும் ஊரக திட்டங்கள் அதன் செயலாக்கம் குறித்து விளக்கிப் பேசினார்.
தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments