FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஜவ்வாதுமலையில் 11 ஆயிரம் பழ மரக்கன்றுகள் நடும் பணி: மாவட்ட ஆட்சியர் தொடக்கிவைத்தார்

ஜவ்வாதுமலை ஒன்றியம், பலாமரத்தூர் ஊராட்சியில் லிச்சி, சீதா உள்பட பல்வேறு வகையான 11 ஆயிரத்து 200 பழ மரக்கன்றுகள்

Updated On : 31 டிசம்பர் 2018, 5:34 am IST
பகிர்:

ஜவ்வாதுமலை ஒன்றியம், பலாமரத்தூர் ஊராட்சியில் லிச்சி, சீதா உள்பட பல்வேறு வகையான 11 ஆயிரத்து 200 பழ மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி மரக்கன்று நட்டு தொடக்கிவைத்தார்.
பலாமரத்தூர் ஊராட்சியில் தோட்டகலைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், லிச்சி, சீதா உள்பட பல்வேறு வகையான 11 ஆயிரத்து 200 பழ மரக்கன்றுகள் ரூ.11.98 லட்சத்தில் நடப்படவுள்ளன.
இந்த மரக்கன்றுகள் நடும் பணியை மரக்கன்று நட்டு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சனிக்கிழமை தொடக்கிவைத்தார். 
மேலும், விவசாயிகளுக்கு பழ மரக்கன்றுகளை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, ஆரணி கோட்டாட்சியர் மைதிலி மற்றும் அரசு அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments