FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கோயில் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 7 ஜூன் 2018, 8:22 am IST
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பழனிராஜா தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் திருக்கோயில் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும்.
கோயிலில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தற்காலிகப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments