செய்யாறில் சுற்றித் திரிந்த 37 நாய்கள் பிடித்து வெளியேற்றம்
செய்யாறில் சுற்றித்திரிந்த 37 நாய்களை திருவத்திபுரம் நகராட்சியினர் வியாழக்கிழமை பிடித்து வெளியேற்றினர்.
செய்யாறில் சுற்றித்திரிந்த 37 நாய்களை திருவத்திபுரம் நகராட்சியினர் வியாழக்கிழமை பிடித்து வெளியேற்றினர்.
செய்யாறு அரசு மருத்துவமனை, ஆற்காடு சாலை, பேருந்து நிலையம், நேரு நகர், அண்ணா நகர், ஆரணி சாலை, நரசிம்மன் நகர், காந்தி சாலை மற்றும் சந்தை ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு தொல்லையளித்தப்படி நாய்கள் சுற்றித்திரிந்து வந்தன. அவ்வாறு சுற்றித்திரிந்த 37 தெரு நாய்களை திருவத்திபுரம் நகராட்சியினர் பிடித்து போளூர் வனச்சரகப் பகுதியில் விட்டனர். திருவத்திபுரம் நகராட்சி ஆணையாளர் ஸ்டாலின் பாபு மேற்பார்வையில், தெரு நாய்களை பிடித்து வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.