FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பரமனந்தலில் மனுநீதி நாள் முகாம்

செங்கத்தை அடுத்த பரமனந்தல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 128 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

செங்கத்தை அடுத்த பரமனந்தல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 128 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு திருவண்ணாமலை கோட்டாட்சியர் தங்கவேல் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ரேணுகா முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக துணை ஆட்சியர் (பயிற்சி) பிரதாப் கலந்துகொண்டு, 128 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும்15-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயகுமார், பத்மா, சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments