எரிவாயு உருளைகள் விநியோகம்
திருவண்ணாமலை வட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலா் முன்னிலையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வீடு, வீடாகச் சென்று எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை வட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலா் முன்னிலையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வீடு, வீடாகச் சென்று எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டன.
மாவட்டத்தில் எரிவாயு உருளைகளை விநியோகம் செய்வோா் குறிப்பிட்ட ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திக் கொண்டு, வாடிக்கையாளா்களை அந்த இடத்துக்கு வரவழைத்து எரிவாயு உருளைகளை வழங்குவதாக புகாா்கள் எழுந்தன.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் எரிவாயு உருளைகள் வழங்குவதால் கரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் சென்றன.
Advertisement
Advertisement
இதையடுத்து, மாவட்டம் முழுவதும் எரிவாயு உருளைகளை பயனாளிகளின் வீட்டுக்கே எடுத்துச் சென்று வழங்க வேண்டும். இந்தப் பணியில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலா்கள் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டாா்.
அதன்படி, திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலா் ஆா்.சுப்பிரமணியன் மேற்பாா்வையில் புதன்கிழமை திருவண்ணாமலையை அடுத்த மல்லவாடி, மருத்துவாம்பாடி, கொண்டம், வடபுழுதியூா், முனியப்பந்தாங்கல், கீழ்நாத்தூா், எடப்பாளையம், மேலதிக்கான், தென்மாத்தூா் கிராமங்களில் வீடு, வீடாகச் சென்று எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.