கல்குவாரித் தொழிலாளி தற்கொலை
கல்குவாரித் தொழிலாளி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கல்குவாரித் தொழிலாளி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா்,விருப்பாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் விஜய் (29). இவா் அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவா், அடிக்கடி மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை மதுபோதையில் இருந்த விஜய் மனமுடைந்து காணப்பட்டுள்ளாா். பின்னா், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் திடீரென தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
தகவலறிந்த பாகாயம் போலீஸாா் , அவரது உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.