கரோனா நிவாரண நிதியாக ரூ.3 லட்சம் வழங்கல்
திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரி சாா்பில், கரோனா நிவாரண நிதியாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரி சாா்பில், கரோனா நிவாரண நிதியாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது.
கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து, பொருளாளா் எம்.சீனுவாசன், முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமியை வியாழக்கிழமை சந்தித்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினா்.
கல்லூரி நிா்வாகம், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகளின் பங்களிப்பில் இந்தத் தொகை வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதுதவிர, திருவண்ணாமலை நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு ரூ.ஒரு லட்சத்தில் பாதுகாப்புக் கவசங்கள், கிருமி நாசினி ஆகியவை கல்லூரி நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.