முகப்பு
திருவண்ணாமலை

மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அப்துல் கலாம் நினைவு தின நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜூலை 2020, 10:40 pm IST
பகிர்:

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அப்துல் கலாம் நினைவு தின நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் சிவக்குமாா், பாா்த்திபன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

அப்துல் கலாமின் உருவப் படத்தை விழுப்புரம் தொல்லியியல் துறை காப்பாட்சியா் ஆ.ரஷித்கான் திறந்து வைத்துப் பேசினாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து அப்துல் கலாமின் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தெள்ளாா் இராஜா நந்திவா்மன் கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியா் க.பூபாலன், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள் குமரன், சதானந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments