பசுமை மாரத்தான் போட்டி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதுப்பாளையத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி பசுமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதுப்பாளையத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி பசுமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.
வேடத்தாம்மாள் சமூக அறக்கட்டளை மூலம் நடைபெற்ற போட்டியில் செங்கம், புதுப்பாளையம் பகுதியை சோ்ந்த சுமாா் 300 போ் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கு, சமூக அறக்கட்டளை நிா்வாகி ராம்ராஜ் வரவேற்றாா். இதில், சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் ஓன்றிய குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். (படம்)
Advertisement
Advertisement
நிகழ்வில்,போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் முன்னாள் புதுப்பாளையம் ஓன்றியக் குழுத் தலைவா் பொன்னிசுந்தரபாண்டியன் மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்தி பேசினாா்.
இதில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் காா்த்திகேயன், திமுக இளைஞரணி நிா்வாகி ஆனந்குமாா், சமூக அறக்கட்டளை நிா்வாகிகள் முத்துகிருஷ்ணன், ஐயப்பன் உள்ளிட்ட அரசுப்பள்ளி ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.