FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!

சென்செக்ஸ் 152.05 புள்ளிகள் உயர்ந்து 78,581 புள்ளிகளாகவும், நிஃப்டி 9.75 புள்ளிகள் உயர்ந்து 24,624.65 புள்ளிகளாக நிலைபெற்றது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:54 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களை தொடர்ந்து 4வது முறையாக மாற்றாமல் வைத்திருந்ததைத் தொடர்ந்து, ஏற்ற இறக்கமான இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 152 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் உயர்வில் தொடங்கி, முதல் பாதியில் 79,055.38 என்ற இன்றைய உச்சத்தை எட்டியது. பிற்பகலில் 769.64 புள்ளிகள் சரிந்து 78,285.74 என்ற குறைந்தபட்ச நிலையை எட்டியது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 152.05 புள்ளிகள் உயர்ந்து 78,581 புள்ளிகளாகவும் நிறைவடைந்த நிலையில், இதில் 17 பங்குகள் உயர்ந்தும், 12 பங்குகள் சரிந்தும், ஒரு பங்கு மாற்றமின்றியும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 9.75 புள்ளிகள் உயர்ந்து 24,624.65 புள்ளிகளாக நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையில், இந்த குறியீடு அதிகபட்சமாக 24,677.60 புள்ளிகளையும் பிறகு குறைந்தபட்சமாக 24,497.95 புள்ளிகளையும் எட்டியது.

Advertisement

Advertisement

வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் முன்னணி வங்கி, வாகன மற்றும் மூலதனப் பொருட்கள் துறைப் பங்குகளின் விலை உயர்ந்தன.

ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் ஒப்பந்தங்களைக் கொண்ட பங்குகளுக்குப் பங்குச் சந்தைகள் புதிய ஏல முறையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, நேற்றைய முன்தினம் (திங்கள்கிழமை) முதல் குறியீடுகள் இடையே பெரிய அளவிலான வேறுபாடுகள் காணப்படுகின்றன. பங்குச் சந்தையின் 'கேஷ் செக்மென்ட் பிரிவில், 'க்ளோசிங் ஆக்ஷன் செஷன்' எனப்படும் வர்த்தக நிறைவு ஏல முறை திங்கள்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. விலை நிர்ணய செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாகவும் வலுவானதாகவும் மாற்றும் நோக்கில், தகுதியுள்ள பங்குகளின் நிறைவு விலையைத் தீர்மானிக்க இந்த புதிய ஏல முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈரான் போரினால் ஏற்படும் எரிசக்திச் செலவு உயர்வு, பணவீக்க அழுத்தங்களுக்கு வழிவகுக்குமா என்பது குறித்த தெளிவு கிடைக்கும் வரை காத்திருக்கும் முடிவை எடுத்து, தனது வட்டி விகிதத்தை தொடர்ந்து ரிசர்வ் வங்கியானது 4வது கூட்டத்திலும் மாற்றாமல் வைத்திருந்தது.

சென்செக்ஸில் அல்ட்ராடெக் சிமெண்ட், என்.டி.பி.சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் கோடக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல் டெக், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.

மத்திய கிழக்கு மோதலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைப்பதில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருப்பதால், சமீபத்திய ஏற்றத்தைத் தொடர்ந்து லாபத்தைப் பதிவு செய்ததால், இந்தியப் பங்குச் சந்தைகள் பெரும்பாலும் மாற்றமின்றி முடிவடைந்தன. நிஃப்டி, அதன் இறுதி ஏல அமர்வுக்கு முந்தைய இறுதி நிலைக்கு மேல் தொடங்கி, அமர்வு முழுவதும் விற்பனை அழுத்தம் வெளிப்பட்டதால், ஆதரவான அறிகுறிகள் இருந்தபோதிலும், பங்குச் சந்தை எச்சரிக்கையான போக்கைக் மேற்கொண்டது.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ. 2,446.47 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தையில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 3.76 சதவிகிதமும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு 3.66 சதவிகிதமும் உயர்ந்தன. ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் உயர்வுடன் நிறைவடைந்தன.

ஐரோப்பாவில் சந்தைகள் நேர்மறையான நிலையில் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாயக்கிழமை) கணிசமாக உயர்ந்தன.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.75 சதவீதம் உயர்ந்து 80.75 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

BSE closed higher by 152 points after the Reserve Bank of India kept its key policy rates unchanged for the fourth consecutive time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments