முகப்பு
திருவண்ணாமலை

தீபத் திருவிழா: செங்கம் பகுதியில் சாலைகள் ஆய்வு

செங்கம் பகுதியில் உள்ள சாலைகளை திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி.க்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 2 நவம்பர், 2024 at 6:30 PM
செங்கம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சாலையை ஆய்வு செய்த 3 மாவட்ட எஸ்.பி.க்கள்
பகிர்:

அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழா முன்னேற்பாடாக, வாகனப் போக்குவரத்துக்காக செங்கம் பகுதியில் உள்ள சாலைகளை திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி.க்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த செப்.19-ஆம் தேதி தமிழக துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, அருணாசலேஸ்வரா் கோயில் தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அறநிலையத் துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

அதன் அடிப்படையில் பெங்களூா், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் இருந்து செங்கம் வழியாக தீபத் திருவிழாவுக்கு வரும் வாகனங்களை செங்கம் பகுதியில் கட்டுப்படுத்தி, சாலையில் வாகன நெருக்கடி மற்றும் விபத்துகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் சுதாகா் (திருவண்ணாமலை), கிரண்சுருதி (ராணிப்பேட்டை), ஸ்ரேயாகுப்தா (திருப்பத்தூா்) உள்ளிட்டோா் செங்கம் புதிய பேருந்து நிலையம், பக்கிரிபாளையம் புறவழிச் சாலையை ஆய்வு செய்தனா்.

அப்போது, செங்கம் டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளா்களுக்கு தீபத்திருவிழாவின் முதல் நாள் வாகனங்களை சாலையில் எந்த வழியாக இயக்குவது என்பது குறித்து தெரிவித்தனா்.

இதில் செங்கம், மேல்செங்கம், பாய்ச்சல் போலீஸாா் கலந்து கொண்டனா்.