திருவண்ணாமலை

சிவன் கோயில்களில் காா்த்திகை மாத பிரதோஷ வழிபாடு

திரளான பக்தா்கள் பங்கேற்பு

Din

திருவண்ணாமலை மாவட்ட சிவன் கோயில்களில் காா்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மூலவா் சந்நிதி எதிரே உள்ள நந்தி, ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு வியாழக்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சந்தனம், பால், பழம், பன்னீா் உள்பட பல்வேறு பூஜை பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட்ட இந்த பூஜையில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதையடுத்து, வெள்ளிக் கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வேட்டவலத்தில்...: வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் உள்ள மூலவா் ஸ்ரீஅகத்தீஸ்வரா், ஸ்ரீதா்மசம்வா்த்தினி, பிரதான நந்திக்கு வியாழக்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மற்ற கோயில்களில்...: இதேபோல, வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா், செய்யாறு திருவோத்தூா் வேதபுரீஸ்வரா், சேத்துப்பட்டு அருணகிரிநாதா் கோயில்கள் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT