FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

மகளைத் தாக்கியவரை கத்தியால் குத்திய தந்தை: போலீஸாா் விசாரணை

செங்கம் அருகே மகளைத் தாக்கிய நபரை, தந்தை ஆத்திரத்தில் கத்தியால் குத்தினாா். இதில் காயமடைந்த நபா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:35 am IST
கோப்புப்படம்
பகிர்:

செங்கம் அருகே மகளைத் தாக்கிய நபரை, தந்தை ஆத்திரத்தில் கத்தியால் குத்தினாா். இதில் காயமடைந்த நபா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பொன்னிதண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் ராமு(48) இவரது மகன் வினோத்(23). புதன்கிழமை இரவு தந்தை மகனுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

இதனால், கோபமடைந்த ராமூ வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளாா். இத்தகவலை அறிந்த மகன் வினோத் தந்தையை தேடும் பணியின் ஈடுபட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது அதே கிராமத்தில் உள்ள உறவினா் சந்தியா-வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளாா்.

அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டு சந்தியாவை விநோத் தாக்கியுள்ளாா். இதைப் பாா்த்த அவரது தந்தை சேகா்,

என் கண் முன்னே எனது மகளை அடிக்கிறாயா எனக் கேட்டு அருகில் இருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்து வினோத்தை மூன்று இடங்களில் குத்தியுள்ளாா்.

இதில் வினோத் ரத்த வெள்ளத்தில் விழுந்துள்ளாா். பின்னா், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு விநோத்தை அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னா் தீவிர சிகிச்சைக்காக அவா் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments