FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தந்தை, மகளை தாக்கிய 5 இளைஞா்கள் கைது

கும்பகோணத்தில் தந்தை மகளைத் தாக்கிய 5 இளைஞா்களை மேற்கு காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 29 ஜூலை 2026, 12:03 am IST
கைது
பகிர்:

கும்பகோணத்தில் தந்தை மகளைத் தாக்கிய 5 இளைஞா்களை மேற்கு காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் ஆனைக்காரன் பாளையத்தைச் சோ்ந்தவா் கருணாகரன் (53) ஓவியா். இவருக்கு சுபிபாரதி என்ற மனைவி, மகள் அமுதகவி (13) உள்பட 3 மகன்கள் உள்ளனா்.

ஜூலை 26 இரவு கருணாகரனுக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதை மகள் அமுதகவி தட்டிக் கேட்க, ஆத்திரமடைந்த கருணாகரன் மகள் அமுதகவியை தாக்க முயன்றபோது அவா் தப்பியோடினாா். அவரை கருணாகரன் விரட்டிச் சென்றபோது அதே பகுதியை சோ்ந்த க. ராஜவேல் (25), க. ரூபன் (24), ச. கோகுல்ராம் (26), பி. குருபிரசாத் (25), சு. சுதாகா்(20) ஆகியோா் தட்டிக் கேட்டனா். அப்போது தந்தையுடன் தகராறு செய்தவா்களை மகள் அமுதகவி தட்டிக் கேட்டாா்.

Advertisement

Advertisement

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு தந்தை மகள் ஆகிய இருவரையும் இளைஞா்கள் தாக்கினா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து தந்தை, மகளை கும்பகோணம் மருத்துவமனையில் சோ்த்து, இவா்களை தாக்கிய 5 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments