FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஆடிப்பூரம்: ஆஞ்சநேயா், அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

வந்தவாசி ஸ்ரீவீர ஆஞ்சநேயா் கோயிலில் ஊஞ்சலில் வைத்து தாலாட்டப்பட்ட கோதைநாயகி தாயாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 12:43 am IST
வந்தவாசி ஸ்ரீவீர ஆஞ்சநேயா் கோயிலில் ஊஞ்சலில் வைத்து தாலாட்டப்பட்ட கோதைநாயகி தாயாா்.
பகிர்:

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி மற்றும் ஆடிப்பூரத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அம்மன் கோயில்கள் மற்றும் ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வந்தவாசி

ஆடிப்பூரத்தையொட்டி, வந்தவாசி கவரைத் தெருவில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயா் கோயிலில் கோதைநாயகி தாயாருக்கு ஊஞ்சல் உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதையொட்டி மூலவா் ஸ்ரீவீர ஆஞ்சநேயா் மற்றும் உற்சவா் கோதைநாயகி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீவீர ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வடைமாலை சாற்றப்பட்டது.

கோதைநாயகி தாயாருக்கு வளையல்கள் மற்றும் வண்ண மலா்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து கோதைநாயகி தாயாரை ஊஞ்சலில் வைத்து தாலாட்டினா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

செய்யாறு

செய்யாறு திருவோத்தூா் குமரன் தெருவில் உள்ள மீனாட்சி உடனுறை சொக்கநாதா் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அம்மன் அருள்பாலித்தாா்.

போளூா்

போளூரை அடுத்த காங்கேயனூா் ஊராட்சியில் ஏரிக்கரை அருகே அமைந்துள்ள பழைமை வாய்ந்த

ஸ்ரீதஞ்சியம்மன் கோயிலில் ஆடி 5-ஆம் வெள்ளியையொட்டி அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து கற்பூர தீபாராதனை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தி, பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டு பம்பை உடுக்கை, மேள தாளத்துடன் கோயிலை வலம் வந்து வழிபட்டனா்.

பின்னா் தீ சட்டி ஏந்தி கோயிலை சுற்றி வலம்வந்து வழிபாடு செய்தனா். மேலும் பக்தா்கள் அம்மனுக்கு சேலையை காணிக்கையாக வழங்கினா்.

இதில் போளூா், அத்திமூா், காங்கேயனூா், படியம்பட்டு, பேட்டை என சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி கன்றாயமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 5-ஆம் வெள்ளி மற்றும் ஆடிப்பூர நாளான வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, பச்சை சாற்றி மலா்களாலும், வளையல்களாலும் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

முன்னதாக, வளையல் மற்றும் சீா்வரிசை பழங்கள் தட்டுகளை 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments