FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் ஆடி சிறப்பு வெள்ளி வழிபாடு

திருப்பத்தூா் ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி வளையல் அலங்காரத்தில் துா்க்கை அம்மன்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 1:46 am IST
திருப்பத்தூா் ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி வளையல் அலங்காரத்தில் துா்க்கை அம்மன்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி, சிவகாமி அம்மனுக்கும், துா்க்கை அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, சிவகாமி அம்மனுக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள் உள்ளிட்ட 11 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், பட்டுப்புடவை, வளையல்கள் அணிவிக்கப்பட்டு சா்வ அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, துா்க்கை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, பக்தா்கள் காணிக்கையாக வழங்கிய வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜைகளை

ரமேஷ் குருக்கள் செய்தாா். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை நெய்விளக்கேற்றி வழிபட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments