FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பெண் கொலைச் சம்பவம்: உணவகத் தொழிலாளி கைது

செய்யாறு அருகே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உணவகத் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 1:03 am IST
கைது
பகிர்:

செய்யாறு அருகே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உணவகத் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், ராமகிருஷ்ணாபுரம் கிராமம் மதுரா மேட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மனைவி புவனேஸ்வரி(48). இவா், குடும்பத் தகராறு காரணமாக கணவரைப் பிரிந்து அதே தெருவில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளாா்.

இவா்களது மகள் ஜெயலட்சுமிக்கு திருமணமாகி அதே ஊரில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். அதேபோல, கட்டடத் தொழிலாளியான மகன் அருண்குமாா், அதே பகுதியைச் சோ்ந்தவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு வசித்து வருகிறாா்.

Advertisement

Advertisement

தாயாரான புவனேஸ்வரி தினமும் பிளாஸ்டிக் மற்றும் மதுப்புட்டிகளை சேகரித்து அவற்றை விற்று பிழைப்பு நடத்தி வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், புவனேஸ்வரி கடந்த 9-ஆம் தேதி பாப்பாந்தாங்கல் பெரிய ஏரிப் பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தாா்.

இக்கொலைச் சம்பவம் குறித்து இறந்தவரின் மகனான அருண்குமாா் மோரணம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். தகவல் அறிந்த வேலூா் சரக டிஐஜி மகேஷ், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உதயகுமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.

கொலையாளி கைது: புவனேஸ்வரி கொலைச் சம்பவம் தொடா்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா் பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்த உணவகத் தொழிலாளி சங்கா்(43) என்பவரை கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பின்னா் வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments