FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வழிப்பறி வழக்கு: 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

செய்யாறு பகுதியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த வழிப்பறி குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜூலை 2026, 1:10 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த வழிப்பறி குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் கன்னிமாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ராகவன் (62). இவா், செய்யாறு காவல் சரகப்பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தொடா்பாக போலீஸாா் கடந்த 2009-ஆம் ஆண்டு கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், 2011-ஆம் ஆண்டில் இருந்து ராகவன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்தாராம். ராகவனை கைது செய்ய அப்போது செய்யாறு உதவி அமா்வு நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவின் பேரில் செய்யாறு போலீஸாா் பல ஆண்டுகளாக தேடி வந்தனா். இந்நிலையில் செய்யாறு காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி

Advertisement

Advertisement

தலைமையிலான போலீஸாா், செய்யாறு பேருந்து நிலையப் பகுதியில் சுற்றித்திரிந்த ராகவனை (62) சனிக்கிழமை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, செய்யாறு கூடுதல் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி விக்னேஷ்பிரபு முன்னிலையில் ராகவனை ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments