FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

வழிப்பறி வழக்கில் 25 ஆண்டுகளாக தேடப்பட்டவா் கேரளத்தில் கைது

7 செப்டம்பர் 2026, 1:55 am IST
கைது
பகிர்:

வழிப்பறி வழக்கில் சிக்காமல் கேரளத்தில் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் அரவிந்தன் (60). கடந்த 2001- ஆம் ஆண்டு காரியாபட்டி பகுதியில் நிகழ்ந்த வழிப்பறி வழக்கில் காவல் துறையினா் இவரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், அரவிந்தன் கேரளத்தில் வசித்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் விக்னேஷ் உத்தரவின் பேரில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சரவணன் தலைமையில் தலைமைக் காவலா்கள் சங்கா், கணேஷ், நாகராஜ் ஆகியோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இவா்கள் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம், சாலக்குடி பகுதியில் முகமது பிலால் என்ற பெயரில் அரவிந்தன் ஆதாா் உள்ளிட்ட அடையாள ஆவணங்களிலும் பெயா் மாற்றம் செய்து, வசித்து வந்தது தெரியவந்தது.

அவரை தனிப்படை போலீஸாா் சனிகிழமை கைது செய்து காரியாபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். அவரிடம் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற வழிப்பறி சம்பவம் தொடா்பக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments