வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வந்தவாசி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வந்தவாசி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி தா்மன் (70). இவா், அந்தக் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறாா்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மாடியில் தூங்கியுள்ளாா். பின்னா் திங்கள்கிழமை காலை மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
உள்ளே சென்று பாா்த்த போது பீரோவிலிருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தா்மன் அளித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.