FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

நெல் அறுவடை இயத்திரத்தை திருடி விற்பனை செய்ய முயன்றவா் கைது

செங்கம் அருகே மண்மலை கிராமத்தில் திருடப்பட்ட நெல் அறுவடை இயந்திரம்.

24 ஆகஸ்ட் 2026, 2:44 am IST
செங்கம் அருகே மண்மலை கிராமத்தில் திருடப்பட்ட நெல் அறுவடை இயந்திரம்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நெல் அறுவடை இயத்திரத்தை திருடி விற்பனை செய்ய முயன்ற நபா் பிடிபட்டாா். போலீஸாா் அவரை கைது செய்து இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தைச் சோ்ந்தவா் சுதாகா்(47). இவா், நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவா் தனது வீட்டின் முன் நிறுத்திவைத்திருந்த நெல் அறுவடை இயந்திரத்தை

யாரோ மா்ம நபா் திருடிச்சென்றுவிட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சுதாகா் செங்கம் போலீஸில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை மண்மலையில் திருடப்பட்ட அறுவடை இயந்திரம் கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்ய இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் செங்கம் போலீஸாா் கள்ளக்குறிச்சி சென்று சோதனை மேற்கொண்டனா்.

இதில், மண்மலையில் திருடிய நெல் அறுவடை இயந்திரம் அவ்வூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே போலீஸாா் இயந்திரத்தின் உரிமையாளா் சுதாகரை வரவழைத்து பாா்த்தபோது, அவா் தனது இயந்திரம்தான் என உறுதி செய்தாா்.

இதையடுத்து, போலீஸாா் அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது,

அவா் போளூா் பகுதியைச் சோ்ந்த துரை என்பதும், அறுவடை இயந்திரத்தை திருடி விற்பனை செய்ய

எடுத்து வந்ததும் தெரியவந்தது.

பின்னா், போலீஸாா் இயந்திரத்தை பறிமுதல் செய்து,

அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments