FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

இனி வீட்டு வேலையும் காலி! ஏஐ ரோபோவுக்கு பயிற்சி அளிக்கும் இல்லத்தரசிகள்!

வீட்டு வேலைகளைச் செய்ய செய்யறிவு (ஏஐ) இயந்திரங்களுக்கு இந்திய இல்லத்தரசிகள் பயிற்சி அளித்து வருவது குறித்து...

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 4:06 pm IST
செய்யறிவு ரோபோக்கு பயிற்சி அளிக்கும் இல்லத்தரசிகள்... - எக்ஸ்
பகிர்:

வீட்டு வேலைகளைச் செய்ய செய்யறிவு (ஏஐ) இயந்திரங்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த இல்லத்தரசிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

ஏஐ இயந்திரங்களுக்கு வீட்டு வேலைகளைச் செய்ய மனிதர்களின் அசைவுகளைக் கற்றுக்கொடுக்கும் வகையில் இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதுமே செய்யறிவு (ஏஐ) வளர்ச்சி அதிகரித்து வருகிறது. ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் என அனைத்து இடங்களிலும் செய்யறிவு இயந்திரங்கள் அறிமுகமாகியுள்ள நிலையில், வீட்டு வேலைகளையும் இவை விரைவில் ஆக்கிரமிக்கவுள்ளன.

Advertisement

Advertisement

வீட்டில் உள்ள வேலைகளை எளிமையாக்க மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் என பல இயந்திரங்கள் வந்திருந்தாலும், பணிக்குச் செல்லும் பலருக்கு நேரமின்மையால் அதனைப் பயன்படுத்திக் கூட வீட்டு வேலைகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டு வேலைகளுக்கு நபர்களை வைத்துக்கொள்ளும் போக்கு இப்போது உள்ள நிலையில், வீட்டு வேலைகளுக்கு வருவோர் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதால் பலர் இயந்திரங்களையே நம்பும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இதனிடையே மறுபுறம் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக செய்யறிவு இயந்திரங்களுக்கு இந்திய மகளிர் பயிற்சி அளித்து வருகின்றனர். தலையில் கேமராவை பொருத்திக்கொண்டு கையுறை போன்று இருக்கும் இயந்திர கைகளை பொருத்திக்கொண்டு வீட்டு வேலைகளை அப்பெண்கள் செய்கின்றனர்.

வேலைகளைச் செய்யும்போது கைகளின் அசைவுகளை தலையில் இருக்கும் கேமரா மூலம் ஏஐ இயந்திரம் விடியோ பதிவு செய்துகொள்கிறது. துணி மடிப்பது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, சமையலுக்கு காய்கறி வெட்டுவது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, பொருள்களை துடைத்து அடுக்குவது என சாதாரண வீட்டு வேலைகளைச் செய்யும்போது அதில் பெண்கள் மேற்கொள்ளும் அசைவுகளை ஏஐ இயந்திரம் விடியோவாக உள்வாங்குகிறது.

இந்தத் தரவுகள் வீட்டு வேலைகளைச் செய்து முடிப்பதற்கான இயந்திரம் உருவாக்குவதற்கான தரவுகளாகப் பயன்படுகின்றன. இதற்கான பெண்களுக்கு தனி பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டு வேலைகளைச் செய்து ஏஐ ரோபோக்களுக்காக விடியோ பதிவு செய்யும் பெண்களுக்கு இதன்மூலம் வருவாயும் கிடைக்கிறது. ஒரு மணிநேரத்துக்கு ரூ. 250 வரை வழங்கப்படுகிறது.

தரவு சேகரிக்கும் நிறுவனங்கள் மூலமாக இந்தத் தகவல்கள் ஏஐ இயந்திரங்களை வடிவமைக்கும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

குறைந்த நேரத்தில் எளிய முறையில் பணம் கிடைப்பதால் பல பெண்கள் இந்த வேலையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும், எதிர்காலத்தில் தங்களின் சொந்த வேலைகளைச் செய்யும் இயந்திரங்களுக்கு தாங்களே பயிற்சி அளிப்பதா? என்ற கேள்வியையும் பலர் முன்வைக்கின்றனர்.

summary

Homemakers training AI robots to do household chores

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments