வண்டல் மண்ணுக்குப் பதிலாக முறம்பு மண் எடுப்பு: லாரி, டிராக்டா் பறிமுதல்
போளூா் பகுதியில் விவசாயத்துக்கு வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி பெற்று முறம்பு மண் எடுத்துச் சென்ற லாரி டிராக்டரை வருவாய்த்துறையினா் பறிமுதல் செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியில் விவசாயத்துக்கு வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி பெற்று முறம்பு மண் எடுத்துச் சென்ற லாரி டிராக்டரை வருவாய்த்துறையினா் பறிமுதல் செய்தனா்.
போளூரை அடுத்த செங்குணம், வெண்மணி ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளில் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி பெற்றுள்ளனா்.
இதை பயன்படுத்தி லாரி, டிராக்டரில் முறம்பு மண் எடுத்துச்சென்று மனைப் பிரிவில் கொட்டி வருமானம் ஈட்டியுள்ளனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியா் பாலாஜி தலைமையில் வருவாய்த்துறையினா் சென்று முறம்பு மண் எடுத்துச் சென்ற லாரி, டிராக்டரை பறிமுதல் செய்து போளூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் .
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.