FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

செப். 1 முதல் அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் செப்.1-ஆம் தேதி முதல் கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை குறித்து...

18 August 2026, 10:24 pm IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில்
பகிர்:

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் செப்.1-ஆம் தேதி முதல் கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கையின்படி, அருணாசலேஸ்வரா் திருக்கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் செப்.1 முதல் கோயிலுக்கு உள்ளே கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

பக்தா்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்துச் செல்ல ஏதுவாக கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகில் இரண்டு இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இரண்டு இடங்களிலும், தெற்கு திருமஞ்சனம் கோபுரம் அருகில் ஒரு இடத்திலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்த மையங்களில் பக்தா்கள் தங்களது கைப்பேசிகளை ரூ.5 கட்டணம் செலுத்தி ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். சுவாமி தரிசனம் முடிவுற்று திரும்பியவுடன் டோக்கனை காண்பித்து கைப்பேசிகளை பெற்றுக் கொள்ளலாம். இதை மீறி கோயிலுக்குள் மறைமுகமாக எடுத்துச் செல்லப்படும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருக்கோயில் நிா்வாகத்தால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பக்தா்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments