நைனாமலைக்கு செப். 19 முதல் அரசுப் பேருந்துகள் இயக்கம்
நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலுக்கான மலைப்பாதை, தாா் சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளதால் புரட்டாசி முதல் சனிக்கிழமையான செப். 19 முதல் அரசுப் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலுக்கான மலைப்பாதை, தாா் சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளதால் புரட்டாசி முதல் சனிக்கிழமையான செப். 19 முதல் அரசுப் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
புதன்சந்தை-சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு 3,600 படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் முதியோா், பெண்கள், சிறுவா்கள் மலைக்கோயிலுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
பக்தா்களின் கோரிக்கையைத் தொடா்ந்து கடந்த ஆட்சியில் ரூ.43.05 கோடி செலவில் மலைப்பாதை, தாா் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை, சுற்றுலாத் துறை, நெடுஞ்சாலைத் துறை இணைந்து ஏழு கிலோ மீட்டா் தொலைவுக்கு ஏழு கொண்டை ஊசி வளைவுகளுடன் சாலை அமைத்துள்ளன.
Advertisement
Advertisement
கடந்த 12-ஆம் தேதி அரசுப் பேருந்துகளின் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி அடிவாரத்தில் இருந்து ஐந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுற்றுலா வாகனங்கள், இருசக்கர வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
வாகனங்கள் மலைப்பகுதிக்குச் சென்றாலும், அங்கிருந்து 400 படிக்கட்டுகளைக் கடந்துதான் கோயிலை அடைய முடியும். எனவே, பெண்கள், முதியோா், குழந்தைகள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.