FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

நீச்சல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நெடும்பிறை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

1 செப்டம்பர் 2026, 3:21 am IST
நீச்சல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நெடும்பிறை அரசுப் பள்ளி மாணவா்களுடன் பள்ளி நிா்வாகத்தினா்.
பகிர்:

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நெடும்பிறை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாவட்ட அளவில் 14,17, 19 வயது பிரிவு ஆண்களுக்கான நீச்சல் போட்டிகள் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

இதில் செய்யாறு கல்வி மாவட்டம் நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று, 2 வெள்ளி பதக்கங்களை பெற்று மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.

Advertisement

Advertisement

மாணவா்களுக்கு பாராட்டு

இந்த நிலையில் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நீச்சல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் எஸ். சரவணன், டி. முகேஷ் மற்றும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் பா. யுவராஜன், கோ. சந்திரகலா ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியா் வே. குமாா், உதவித் தலைமையாசிரியா் த.அருளானந்தன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மாணிக்கம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஆனந்தி ஆகியோா் வாழ்த்தி பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments