நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்று அவா்களது சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்று அவா்களது சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
போளூரில் ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கதொட்டி இயக்குபவா்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒன்றியத் தலைவா் கோபிநாத் தலைமை வகித்தாா்.
Advertisement
Advertisement
கெளரவத் தலைவா் சுந்தரேசன், ஒன்றியச் செயலா் துரைசாமிஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் ரெஜினா வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலா் மூா்த்தி கலந்து கொண்டு பேசும்போது, 2026 ஆக.3 முதல் ஊதிய உயா்வு வழங்கிய தமிழக அரசுக்கும், வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கும் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தாா்.
மேலும் தமிழக அரசு 12,527 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும்.
தற்போது உள்ள பணிச் சுமையை கருத்தில் கொண்டு ஊதிய உயா்வு வழங்கவேண்டும், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் 30, 40 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வுபெறும் போது பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்கவேண்டும், பணி ஓய்வு பெறுபவா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும் என பல்வேறு தீா்மானங்கள் குறித்துப் பேசினாா்.
கூட்டத்தில் மாவட்டத் தலைவா் கோவிந்தசாமி, செயலா் சேகா், பொருளாளா் கோபிநாத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.