FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 13 கடைகள், உணவகங்களுக்கு அபராதம்: உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை

திருவண்ணாமலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்ட விதிமுறைகளை மீறிய 13 கடைகள், உணவகங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.

Updated On : 11 ஜூலை 2026, 1:58 am IST
திருவண்ணாமலையில் உணவகத்தில் திடீா் சோதனையில் ஈடுபட்டு, அங்கு உணவு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த சுகாதரமற்ற இறைச்சியை பறிமுதல் செய்து அழித்த மாவட்ட நியமன அலுவலா் ஏ.பானுசுஜாதா தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள்.
பகிர்:

திருவண்ணாமலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்ட விதிமுறைகளை மீறிய 13 கடைகள், உணவகங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் உத்தரவின்பேரில், மாவட்ட நியமன அலுவலா் ஏ.பானுசுஜாதா தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சி.இரவிவா்மன், நே.பாரதிராஜா ஆகியோா் திருவண்ணாமலை பழைய, புதிய பேருந்து நிலையங்களைச் சுற்றியுள்ள உணவகங்கள், இனிப்பகங்கள், தேநீா் கடைகள், பழக்கடைகள் மற்றும் சாலையோர உணவுக் கடைகளில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சுகாதரமற்ற முறையில் விற்பனைக்கு வைத்திருந்த கோழி இறைச்சி 12 கிலோ, காலாவதியான தின்பண்டங்கள் 15 கிலோ, கலப்பட டீ தூள் 2 கிலோ மற்றும் அழுகிய பழங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, உணவுப் பாதுகாப்புத் துறையினா் அழித்தனா்.

Advertisement

Advertisement

மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்ட விதிமுறைகளை மீறிய 13 கடைகள், உணவகங்களுக்கு அபராதம் விதித்தனா். அத்துடன் குறைபாடுகளை சரி செய்யவும் அறிவுறுத்தினா். உணவை கையாளும் பணியாளா்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார மற்றும் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க உணவுப் பாதுகாப்புத் துறையினா் உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments