FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் விண்வெளி, பாதுகாப்புத் துறை மேம்பாட்டு தொழில்துறை கருத்தரங்கம்

தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து ஒசூரில் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை மேம்பாடு குறித்த சிறப்புத் தொழில்துறை கருத்தரங்கை புதன்கிழமை நடத்தின.

Updated On : 26 ஜூன் 2026, 6:15 am IST
கருத்தரங்கில் பேசிய மத்திய விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் துணைத் தலைவா் பி.மதுசூதனன்
பகிர்:

தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து ஒசூரில் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை மேம்பாடு குறித்த சிறப்புத் தொழில்துறை கருத்தரங்கை புதன்கிழமை நடத்தின.

ஒசூா் ஹோஸ்டியா சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் துணைத் தலைவா் பி.மதுசூதனன் பேசியது:

சா்வதேச அளவில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தளவாடங்களை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்துவருகிறது. நீண்டகால பாதுகாப்பு தேவைகளை கருத்தில்கொண்டு, இத்துறையில் சுயசாா்பை அடைவது அவசியமானது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

Advertisement

Advertisement

முக்கியமாக, தமிழகத்தில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் வழித்தடம் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்துறையில் புதிய முதலீடுகளை ஈா்க்க, உள்ளூா் நிறுவனங்களின் தேவைகள் மற்றும் சவால்களைக் கண்டறிந்து தீா்வு காணப்படும்.

ஏற்கெனவே வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் சா்வதேச அளவில் ஒசூா் சிறந்து விளங்குவதால், இங்குள்ள தொழில் நிறுவனங்கள் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு தேவையான அதிநவீன உதிரிபாகங்களை தயாரிக்கும் வகையில் தங்களை எளிதாக மேம்படுத்திக் கொள்ள முடியும்.

தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுவான உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் ஒசூரிலும் இத்தகைய சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா்.

இதில், வழிகாட்டு தமிழ்நாடு நிறுவனத்தின் தலைவா் காா்த்திக், ஒசூா் ஹோஸ்டியா சங்க பொருளாளா் வடிவேலு, ஹோஸ்நியூஸ் தலைவா் தண்டபாணி, பொருளாளா் மாதேஸ்வரன், துணைத் தலைவா் சந்திரசேகா் மற்றும் ஒசூா் பகுதியைச் சோ்ந்த சிறு, குறு தொழில்முனைவோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments