FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

200 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: 2 போ் கைது

வந்தவாசி அருகே பைக்கில் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட 200 ஜெலட்டின் குச்சுகளை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.

Updated On : 22 ஜூலை 2026, 12:35 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

வந்தவாசி அருகே பைக்கில் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட 200 ஜெலட்டின் குச்சுகளை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு போலீஸாா் பஜாா் வீதியில் திங்கள்கிழமை மாலை வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை நிறுத்தி அவா்கள் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்தனா். இதில், மூட்டையில் அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகள் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து பைக்கில் வந்தவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் இருவரும் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த அழகேசன்(35), ரமேஷ் (36) ஆகியோா் என்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

மேலும், கிணறு தோண்டும் பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ்பாபு என்பவரிடம் இருந்து வெடிபொருள்களை வாங்கிச் செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்து 200 ஜெலட்டின் குச்சிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். மேலும், தலைமறைவான சுரேஷ்பாபுவை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments