FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசியில் ஒரு டன் நெகிழிப் பைகள் பறிமுதல்

வந்தவாசியில் நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் ஒரு டன் எடையுள்ள நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 25 ஜூன் 2026, 12:04 am IST
வந்தவாசி காந்தி சாலையில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள்.
பகிர்:

வந்தவாசியில் நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் ஒரு டன் எடையுள்ள நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வந்தவாசி காந்தி சாலையில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்கப்படுவதாக வந்தவாசி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்தக் கடையில் வந்தவாசி நகராட்சி ஆணையா் வீரவாஞ்சிநாதன் தலைமையில் சுகாதார ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம் மற்றும் பணியாளா்கள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், அந்தக் கடையில் நெகிழிப் பைகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சுமாா் ஒரு டன் எடையுள்ள நெகிழிப் பைகளை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments