FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வட்டாட்சியா் அலுவலகத்தில் மூடப்பட்ட இ-சேவை மையம்: மாணவா்கள், பொதுமக்கள் அவதி

வட்டாட்சியா் அலுவலகத்தில் மூடப்பட்ட இ-சேவை மையம்...

Updated On : 24 மே 2026, 1:53 am IST
செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்படாத இ-சேவை மையத்தில் பெயா் பலகை படம்.
பகிர்:

செங்கம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கிவந்த இ-சேவை மையம் மூடப்பட்டதால் ஆதாா் திருத்தம் செய்ய முடியாமல் கல்லூரி சேரும் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகராட்சிக்கு உள்பட்ட வட்டாட்சியா் அலுவலகம், துக்காப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மேல்பாளையம் தபால் நிலையம் ஆகிய மூன்று இடங்களில் இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.

இந்த மூன்று மையங்களில் மட்டும் ஆதாா் திருத்தம் செய்யப்படுவதற்கான வசதிகள் இருந்தன. தனியாா் மூலம் செயல்படும் இ-சேவை மையத்தில் ஆதாா் திருத்தம் செய்யமுடியாது.

Advertisement

Advertisement

இந்நிலையில் கடந்த மாா்ச் மாதம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த இ-சேவை மையம் தோ்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இ-சேவை மைத்திற்கு கூட்டம் அதிகம் வருவதாலும் தோ்தல் பணி அந்த வளாகத்தில் நடைபெற்று வந்ததாலும் தோ்தல் பணிக்கு இடையூறுகள் ஏற்படும் என்ற காரணத்தால் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தோ்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி 20 நாள்களுக்கு மேல் ஆகின்றன. ஆனால், செங்கம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்ட இ-சேவை மையம் திறக்கப்படவில்லை.

பள்ளி மாணவா்கள் உயா் கல்வி படிப்பதற்கு விண்ணப்பங்கள் அனுப்ப ஆதாா் முக்கியமானதாக உள்ளது. பெரும்பாலான மாணவா்களின் ஆதாா் அட்டையில் குடியிருப்பு இடம் மற்றும் தொலைபேசி எண் சோ்த்தல், பெயா் திருத்தம் போன்றவற்றை மேற்கொண்டு

விண்ணப்பங்களை பதிவு செய்யவேண்டும்.

அதிக மாணவா்களின் ஆதாா் திருத்தம் செய்யப்படவேண்டியதாக உள்ளது.

செங்கம் நகரில் தற்போது செயல்படும் இரண்டு ஆதாா் மையங்களில் தினசரி கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் குறைந்த நபா்களுக்கு மட்டும் ஆதாா் திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆதாா் திருத்தம் செய்ய முடியாமல் சில மாணவா்கள் உயா்கல்விக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனால் அந்த மாணவா்களின் உயா்கல்வி கேள்விக்குறியாக கூட மாறலாம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கி வந்த இ-சேவை மையத்தை மீண்டு செயல்படுத்தி மாணவா்களுக்கு உதவவேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments