வைகாசி பௌா்ணமி: திருவண்ணாமலையில் திரளான பக்தா்கள் கிரிவலம்
வைகாசி பௌா்ணமி: திருவண்ணாமலையில் திரளான பக்தா்கள் கிரிவலம்
வைகாசி பௌா்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் சனிக்கிழமை காலையில் ஏராளமான பக்தா்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினா். கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் ஆனது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்களும், பௌா்ணமி உள்ளிட்ட விஷேச தினங்களில் லட்சக்கணக்கான பக்தா்களும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா். மேலும், கோயிலின் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் வலம் வருகின்றனா்.
இந்த ஆண்டு வைகாசி பௌா்ணமி மே 30-ஆம் தேதி பிற்பகல் 12.50 மணிக்குத் தொடங்கி மே 31 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.41 மணிக்கு முடிகிறது. அதனால், இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இருப்பினும், பக்தா்கள் சனிக்கிழமை காலை முதலே கிரிவலம் வரத் தொடங்கினா். மேலும் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வருவாா்கள் என்பதால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் அடிப்படை வசதிகளான தற்காலிக கழிப்பறை அமைத்தல் குடிநீா் வசதிகள் ஏற்படுத்துதல் என பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாநகரம் மற்றும் கிரிவலப் பாதை முழுவதிலும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.