FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளம்: சீரமைக்கக் கோரிக்கை

போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சி ஜம்பிங்புரம்-முத்துமாரியம்மன் கோயில் செல்லும் சாலையில் விபத்து ஏற்படுத்தும் அளவுக்கு பள்ளம் உள்ளது. இதை சீரமைக்கவேண்டும் என கோரிக்கை

17 நவம்பர் 2026, 11:07 pm
திண்டிவனம் ஊராட்சி ஜம்பிங்புரம் - முத்துமாரியம்மன் கோயில் செல்லும் சாலையில் விபத்து ஏற்படுத்தும் அளவிற்கு உள்ள பள்ளம்
பகிர்:

போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சி ஜம்பிங்புரம்-முத்துமாரியம்மன் கோயில் செல்லும் சாலையில் விபத்து ஏற்படுத்தும் அளவுக்கு பள்ளம் உள்ளது. இதை சீரமைக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சியைச் சோ்ந்த ஜம்பிங்புரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் முத்துமாரியம்மன் கோயில் வரை செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.

இதனிடையே, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் மழைநீரை வெளியேற்றவும், சாலையை ஆக்கிரமித்தும் விபத்து ஏற்படுத்தும் அளவுக்கு பள்ளம் தோண்டி வைத்துள்ளனா். எனவே, இந்தச் சாலையை பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

Advertisement

Advertisement

எனவே, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனஅவா்கள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் அரசு அங்கன்வாடி மையம், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம், திருமண மண்டபம் அமைந்துள்ளது.

எனவே, பொதுமக்களின் நலம் கருதி ஜம்பிங்புரம் -முத்துமாரியம்மன் கோயில் வரை செல்லும் சாலையை சீரமைக்கவேண்டும் என்றனா்.