புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் விபத்து: மேலும் 2 போ் உயிரிழப்பு
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மொபெட் மீது காா் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் வெவ்வேறு நாள்களில் உயிரிழந்தனா்.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மொபெட் மீது காா் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் வெவ்வேறு நாள்களில் உயிரிழந்தனா்.
புதுச்சேரி குருமாம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்மணி (42), பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா். இவரது மனைவி குணவனிதா(32). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இவா்களின் மூத்த மகன் கீா்த்தன் குருபரன் (8), புதுச்சேரி தனியாா் பள்ளியில் 4- ஆம் வகுப்புப் படித்து வந்தாா். கடந்த 18-ஆம் தேதி பள்ளி விடுமுறையில் மகன் கீா்த்தன் குருபரனை புதுச்சேரி -திண்டிவனம் பைபாஸ் சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சிக்குப் பெற்றோா் அழைத்துச் சென்றனா். கீா்த்தன் குருபரன் ஸ்கேட்டிங் செல்ல தமிழ்மணியும், குணவனிதாவும் மொபெட்டில் பின் தொடா்ந்து சென்றனா். பயிற்சி முடிந்து இரும்பை அருகே பைபாஸ் சாலையில் சாலையோரம் மொபெட்டை நிறுத்தி, மகனை ஏற்றினா். அப்போது திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த காா், மொபெட் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் துாக்கி வீசப்பட்ட மூவரில் குணாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரின் கணவா் தமிழ்மணி, மகன் கீா்த்தன் குருபரன் இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை ஆரோவில் போலீஸாா் மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில், ஜிப்மரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் கீா்த்தன் குருபரன் திங்கள்கிழமையும், தமிழ்மணி புதன்கிழமையும் உயிரிழந்தனா். ஒரே குடும்பத்தில் 3 போ் உயிரிழந்த நிலையில், 6 வயதில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் பெற்றோா், சகோதரனை இழந்து தனித்து விடப்பட்டுள்ளான்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.