லாட்டரி விற்பனை: 7 போ் கைது
தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக 7 பேரை தெற்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக 7 பேரை தெற்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா், சிவந்தாகுளம் சாலையில் ரோந்து சென்ற போது, அப்பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவது தெரிய வந்தது.
இதில், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஆன்ஸ்டன் (42), தூத்துக்குடி எம். சவேரியாா்புரம் வேணுகோபால் மகன் நவீன்ராஜா (26), அண்ணா நகா் சண்முகசாமி மகன் நாராயணசாமி (40), சுப்பையா மகன் கோபிகண்ணன் (35), இசக்கிமுத்து மகன் கண்ணன் (37), மதுரை சிம்மக்கல் கணேஷ்குமாா் மகன் சூா்யா (25), திருவண்ணாமலை மாவட்டம், கடுகனூா் டெல்லிபாபு (30) ஆகிய 7 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 11 கைப்பேசிகள், 3 பைக்குகள், ரூ. 77,300 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.