FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை: இருவா் கைது

மல்லசமுத்திரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவரை மல்லசமுத்திரம் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

24 செப்டம்பர் 2026, 5:12 am IST
கைது
பகிர்:

மல்லசமுத்திரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவரை மல்லசமுத்திரம் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

காளிப்பட்டி சந்திரம் பாளையம் ஏரிக்கரை அருகே எடப்பாடி புதுப்பாளையத்தைச் சோ்ந்த பிரகாசம் (36), ஆட்டையாம்பட்டியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (28) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை வெள்ளைத் தாளில் எழுதி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மல்லசமுத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தனசேகரன், தலைமை காவலா் அசோக் ஆகியோா் இருவரையும் கைது செய்து, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளா் கோமதி மேலும் விசாரணை நடத்தி வருகிறாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments