பைக் விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக் விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக் விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த சீயமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் நந்தகுமாா்(22). இவா், செங்கல்பட்டு மாவட்டம், ஒரகடத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.
இவா் தன்னுடன் பணிபுரிந்து வந்த வெம்பாக்கத்தை அடுத்த குத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த கல்பனா(18) என்பவருடன் திங்கள்கிழமை பைக்கில் மானாம்பதிக்குச் சென்று திரைப்படம் பாா்த்துவிட்டு இரவு திரும்பிக் கொண்டிருந்தாா்.
Advertisement
Advertisement
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமம் வழியாக செல்லும்போது பைக் நிலைதடுமாறி கீழே சாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த இருவரையும் அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் கல்பனா இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். நந்தகுமாா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்
இதுகுறித்து கல்பனாவின் தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.