FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு பற்றி...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் - கோப்புப்படம்
பகிர்:

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்வதற்கான இலவச டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாகவும், பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரா் கோயிலில், நிகழாண்டு திருக்காா்த்திகை தீபத் திருவிழா நவ. 12 தொடங்கிய நிலையில், நவ. 28 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான காா்த்திகை மகா தீப விழா வரும் நவ. 24-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 50 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஆகிய நிகழ்வுகளை பக்தர்கள் நேரில் தரிசனம் செய்வதற்கு புதிய ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு செய்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஆகியவற்றை நேரில் தரிசனம் செய்ய பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு இலவசமாக அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஆகியவற்றை தரிசனம் செய்ய 3,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவர்கள் அனைவரும் வெளிப்படைத்தன்மையுடன் இணையதளத்தில் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதில், பரணி தீபத்தை தரிசனம் செய்ய உள்ளூர் மக்களுக்கு 500 நுழைவுச்சீட்டுகள், வெளி மாவட்ட மக்களுக்கு 500 நுழைவுச்சீட்டுகள் என மொத்தம் 1,000 நுழைவுச்சீட்டுகளும், மகா தீபத்தை தரிசனம் செய்ய உள்ளூர் மக்களுக்கு 1000 நுழைவுச்சீட்டுகள், வெளி மாவட்ட மக்களுக்கு 1000 நுழைவுச்சீட்டுகள் என மொத்தம் 2,000 நுழைவுச்சீட்டுகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த நுழைவுச்சீட்டுகளை பெற விரும்பும் பக்தர்களுக்கு இன்று காலை முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆதார் எண்ணை பயன்படுத்தி கோவிலின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://annamalaiyar.hrce.tn.gov.in என்ற முகவரியில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

வருகின்ற 20ஆம் தேதி மாலை 3 மணி வரை முன்பதிவு தளம் திறந்திருக்கும். அன்றைய நாள் மாலை 4 மணிக்கு கணினி மூலம் தானியங்கி குழுக்கள் முறையில் 3,000 பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு மின்னணு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புடன் கூடிய குறுஞ்செய்தி அவர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

summary

Karthigai Deepam at Tiruvannamalai! Free Darshan ticket booking has begun!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.