FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி 4 மாணவிகள் உள்பட 5 போ் பலி

திருவண்ணாமலை மாவட்டம் பெரும்பாக்கம் அருகே சமுத்திரம் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

51 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம் பெரும்பாக்கம் அருகே சமுத்திரம் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம் சாலையில் அரசு பெண்கள் பாதுகாப்பு விடுதி மையம் அமைந்துள்ளது. இந்த விடுதியில் தங்கி மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இதனிடையே தீபாவளி விடுமுறையையொட்டி விஜயலட்சுமி, அல்லி, பூமிகா, வள்ளியம்மாள் ஆகிய மாணவிகள் பெண் பாதுகாவலர் விஜயலட்சுமியுடன் ஏரியில் குளிக்கச் சென்றனர்.

Advertisement

Advertisement

அப்போது எதிர்பாராத விதமாக மாணவிகள் நீரில் மூழ்கினர். அவர்களை காப்பாற்றச் சென்ற விடுதி பாதுகாவலரும் உயிரிழந்தார். இவர்கள் 5 பேரின் உடல்களும் ஏரியில் இருந்து மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

5 people, including 4 schoolgirls, drown in a lake near Tiruvannamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.