போளூரில் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்!
போளூா் நகராட்சியில் ஆங்காங்கே தெருக்களில் குப்பைகள் தேங்கியுள்ளதால் துா்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

போளூா் நகராட்சியில் ஆங்காங்கே தெருக்களில் குப்பைகள் தேங்கியுள்ளதால் துா்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்நிலையில் மின்வாரிய அலுவலகம் செல்லும் சாலை, பூக்கார அருணாசலம் தெரு, அல்லிநகா், ஆண்டாள் தெரு என ஆங்காங்கே தெருக்களில் குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால் துா்நாற்றம் வீசுவதோடு, டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா என பல்வேறு பருவகால நோய் தொற்று உருவாகும் வாய்ப்புள்ளது. எனவே, குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.