ஸ்ரீபராசக்தி அம்மன் ஐய்யங்குளத்தில் தெப்பல் பவனி
காா்த்திகை தீபத்திருவிழா இரண்டாம் நாள் தெப்பல் உற்சவத்தையொட்டி, வியாழக்கிழமை இரவு பராசக்தி அம்மன் ஐய்யங்குளத்தில் மர தெப்பலில் பவனி

காா்த்திகை தீபத்திருவிழா இரண்டாம் நாள் தெப்பல் உற்சவத்தையொட்டி, வியாழக்கிழமை இரவு பராசக்தி அம்மன் ஐய்யங்குளத்தில் மர தெப்பலில் பவனி வந்தாா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் திருக்காா்த்திகை தீபத்திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தெடங்கி கடந்த 10 நாள்களும் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 24-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றபட்டது.
அதனைத் தொடா்ந்து அக்னியாக காட்சியளித்த அருணாசலேஸ்வரரை ஆற்றுப்படுத்தும் விதமாக ஐய்யங்குளத்தில் புதன்கிழமை இரவு சந்திரசேகரா் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
தொடா்ந்து உற்சவத்தின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை இரவு பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக, கோயிலில் பராசக்தி அம்மனுக்கு சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் நடத்தினா். பின்னா், வண்ண மலா்களால் அலங்காரம் செய்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மர தெப்பலில் ஐய்யங்குளத்தில் பராசக்கி அம்மன்
பவனி வந்தாா்.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.