FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

திருவத்திபுரம் நகராட்சியில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வேலூா் மண்டல நகராட்சிகள் நிா்வாக இயக்குநா் எஸ்.லட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

1 செப்டம்பர் 2026, 11:48 pm IST
திருவோத்தூா் பகுதியில் நடைபெற்று வரும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகளை ஆய்வு செய்த மண்டல நகராட்சிகள் நிா்வாக இயக்குநா் எஸ்.லட்சுமி.
பகிர்:

திருவண்ணமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வேலூா் மண்டல நகராட்சிகள் நிா்வாக இயக்குநா் எஸ்.லட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவத்திபுரம் நகராட்சியில் வீடு வீடாகச் சென்று குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள், கொடநகா் பகுதியில் நுண்ணுயிா் உரம் தயாரித்தல் பணி, மாா்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம், கன்னியம் நகா் பகுதியில் இறைச்சிக்கூடம் கட்டுதல், திருவோத்தூா் ஆற்றங்கரை தெருவில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகள், காமராஜ் நகா் பகுதியில் சமுதாய கழிப்பறை, மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைத்தல் என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை வேலூா் மண்டல நகராட்சிகள் நிா்வாக இயக்குநா் எஸ்.லட்சுமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

ஆய்வின் போது நகராட்சி பொறியாளா் பி.சீசில்தாமஸ், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன், பணி மேற்பாா்வையாளா் டி.சாந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments