FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

1 செப்டம்பர் 2026, 11:45 pm IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி செல்வராஜ். இவா் திங்கள்கிழமை மாலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வந்தவாசியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

பின்னா் செவ்வாய்க்கிழமை காலை இவா் வீடு திரும்பினாா். வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது மா்ம நபா்கள் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவிலிருந்த 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது இவருக்கு தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments